கியஸ் தொழிற்சாலையில் தீ: மூவர் படுகாயம்

கிள்ளான், ஜன. 21-


கிள்ளான், தாமான் அமான் பெர்டானாவில் கியஸ் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இதர நால்வர் காயமின்றி உயிர் தப்பினர்.

அந்த தொழிற்சாலையின் கட்டடத்தில் கியஸ் கலன்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து தீ பரவியதாக நம்பப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தொழிற்சாலையின் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடம் வரை தீ பரவியது. வட கிள்ளான், தென் கிள்ளான், அண்டலாஸ், புக்கிட் ஜெலுத்தோங், காப்பார், டாமன்சாரா, போர்ட்கிள்ளான் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் முழு வீச்சில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் கடும் காயங்களுக்கு ஆளான மூன்று நபர்கள், அந்நியத் தொழிலார்கள் என்று அடையாளம் கூறப்பட்டதாக அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS