சித்தியவான், ஜன. 21-
45 டன் எண்ணெய் லோரியின் பின் டயர் கழன்றதில் அந்த கனரக வாகனத்துடன் மூன்று கார்கள் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்றிரவு பேரா, சித்தியவான் அருகில் மேற்கு கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
டோயோட்டா யாரிஸ் வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 வயது பெண், 35 வயது ஆடவர் மற்றும் இதர 3,4 வயது இரண்டு சிறார்கள் காயமுற்றனர்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அ ந்த நால்வரை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப்படையின் உதவியை நாடினர்.