கோலாலம்பூர், ஜன.21-
எஸ்.டி.ஆர். எனப்படும் சும்பாங்கான் துனாய் ரஹ்மா உதவித் தொகையின் முதல் கட்ட நிதி அளிப்பு, நாளை செவ்வாய்க்கிழமை முதல் பட்டுவாடா செய்யப்படும் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர். உதவித் தொகை பெறும் 90 லட்சம் பேர் நாளை முதல் தங்களின் வங்கி கணக்கில் இந்த உதவித்தொகையை பெறலாம்.
எஸ்.டி.ஆர். நிதி உதவியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளவர்களின் நிலைக்கு ஏற்ப இந்த உதவித் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேங்க் சிம்பானான் நேஷனல் வாயிலாக இந்த உதவித் தொகையை பெற்றுக்கொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.