அரசாணை உத்தரவு : விவாதிக்கக்கூடாது : விவகாரங்களை மேற்கோள்காட்டியது சட்டத்துறை அலுவலகம்

கோலாலம்பூர், ஜன. 21-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட அரசாணை உத்தரவு தொடர்பில் பொது மக்கள் விவாதிப்பதற்கு தடை விதிக்கும் உத்தரவை பெறுவதற்கு ஆதரவாக சட்டத்துறை அலுவலகம் மூன்று விவகாரங்களை மேற்கோள்காட்டியுள்ளது.

அரசாணை உத்தரவு தொடர்பில் அனைத்து அறிக்கைகள், கருத்துகள் அல்லது விவாதங்கள் என்பது, மன்னிப்பு வழங்கும் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மாமன்னரின் தனிச்சிறப்பு அதிகாரத்தை சந்தேகிக்கும், கேள்வி கேட்கும், சவால் விடுக்கும் அல்லது அவமதிக்கும் விவகாரங்களை உள்ளடக்கியதாகும்.

மன்னிப்பு வாரியத்தின் முடிவுகள், செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களின் நம்பகத்தன்மை அல்லது ஒருமைப்பாட்டைப் பாதிக்கக்கூடிய ஊகங்களையும் இந்தத் தடை உள்ளடக்கி இருப்பதாக சட்டத்துறை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பில் முக்கிய கிளைகளில் ஒன்றான முடியாட்சியின் நிலை, பங்கு மற்றும் அதிகாரத்தை விமர்சிக்கும், அவமதிக்கும் மற்றும்/அல்லது கேலி செய்யும் அறிக்கைகள் அல்லது வெளியீடுகளும் இதில் அடங்கும்.

இந்த மூன்று விஷயங்களும், எந்தவொரு தரப்பினரும் விவாதிக்கக்கூடாது. அவற்றை விவாதிப்பதைத் தடுக்க, ஒரு தடை உத்தரவைப் பெற சட்டத்துறை அலுவலகம் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளது.

WATCH OUR LATEST NEWS