கோலாலம்பூர், ஜன. 21-
இவ்வாண்டு முதல் பண்டிகைக் காலங்களில் இலவச டோல் கட்டணச் சலுகை கிடையாது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் கொண்டாடப்படும் சீனப்புத்தாண்டு உட்பட எந்தவொரு பண்டிகை காலத்திலும் இரண்டு நாட்களுக்கு வழங்கப்படும் இலவச டோல் கட்டண சலுகை இனி இராது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டு முதல் இலவச டோல் கட்டண சலுகை இல்லை என்பதை கடந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டதையும் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இலவச டோல் கட்டண சலுகை, அவ்வப்போது, தேவையைப் பொறுத்து, அது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்பதையும் அவர் விளக்கினார்.