டபிள்யூஇ. நெடுஞ்சாலையின் செக்‌ஷன் 2, இன்று நள்ளிரவு திறக்கப்படுகிறது

பந்திங்கையும், தைப்பிங்கையும் இணைக்கும் மேற்குக்கரை நெடுஞ்சாலையான WCE- யின் லெம்பா கிளாங் செலத்தான் அல்லது SKVE-யின் அடுக்கு நெடுஞ்சாலையின் செக்‌ஷன் 2 இன்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுகிறது.

SKVE அடுக்கு நெடுஞ்சாலையையும் SAE அடுக்குச்சாலையையும் இணைக்கும் WCE-யின் செக்‌ஷன் 2 நெடுஞ்சாலை 7.2 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாகும்.

செக்‌ஷன் 2 திறக்கப்படுவது மூலம் பந்திங்கைச் சேர்ந்தவர்கள் ஒரு மாற்றுச் சாலையாக ஷா ஆலாம், கிள்ளான், புத்ராஜெயா, KLIA அனைத்துலக விமான நிலையம் மற்றும் SKVE நெடுஞ்சாலையின் இணைப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS