புத்ராஜெயா, ஜன. 21-
ஆறு லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றது தொடர்பிர் ஓர் அரசாங்க ஏஜென்சியின் துணை இயக்குநர் உட்பட இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.
தாங்கள் செய்து கொண்டுள்ள விண்ணப்பதை விரைந்து அங்கீகரிப்பதற்கு உதவிக் கோரிய முதலீட்டாளர் நிறுவனம் ஒன்றிடம் கையூட்டதாக 6 லட்சம் ரிங்கிட்டை கேட்டு, பெற்றது தொடர்பில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க அந்த இருவரும் நேற்று புத்ராஜெயா எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டப் பின்னர் மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்று எஸ்.பி.ஆர்.எம். தகவல்கள் கூறுகின்றன.