கோலாலம்பூர்,ஜன. 21-
தம்மை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கான வேலைகளில் இறங்கியதால், கடந்த 2015 ஆம் ஆண்டு அன்றையச் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டடேயிலை பதவியிலிருந்து தாம் நீக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மறுத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு அப்படியோர் உத்தேசத் திட்டத்தை அப்துல் கனி பட்டேல் கொண்டிருந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று நஜீப், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
அப்துல் கனி பட்டேல், உடல் சுகாதாரப்பிரச்னையை எதிர்நோக்கியிருந்தார். அந்த காரணம் உட்பட மேலும் சில காரணங்கள் அடிப்படையில் அவரின் பணி ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில்லை என்று முடிவெடுடுக்கப்பட்டதாக நஜீப் தெரிவித்தார்.