கோலாலம்பூர், ஜன.21-
கடந்த 2024 ஆம் ஆண்டில் மலேசியாவில் விமானப் போக்குவரத்து குறிப்பித்தக்க வளர்ச்சி நிலையைப் பதிவு செய்துள்ளதாக மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 புதிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானச் சேவையை கோலாலம்பூருடன் இணைத்துள்ளன. 16 வழித்தடங்களுக்கு மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளன, 24 புதிய இடங்களுக்கு விமானச் சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
உலகில் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ.பல அனைத்துலக விமான நிறுவனங்களை 2024 ஆம் ஆண்டில் வரவேற்றுள்ளது.
ஆசியாவிற்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ள வழித்தடங்களுக்கு புதிய நேரடி விமானச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2024 இல் Almaty, Ashgabat, Bagdad, Chiang Rai Lam Dong, Labuan Bajo, Jaipur, Nairobi, Nanjing மற்றும் Vientiane ஆகியவை கோலாலம்பூரை இணைத்துள்ள புதிய வழித்தடங்களில் அடங்கும் என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.