கெமாமான், ஜன.21-
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரெங்கானு, கெமாமானில் உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசார் ஆறு நபர்களைக் கைது செய்துள்ளனர். 35 வயதுடைய அந்த நபர் நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் கெமாமான் போலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமட் ஜப்பார் தெரிவித்தார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக கெமாமான் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட அந்த நபர், விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக முகமட் ஜப்பார் மேலும் கூறினார்.