புத்ராஜெயா, ஜன.21-
லஞ்ச தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ரகசியமாக பேசிக்கொண்டதாக ஆடியோ ஒன்று செய்தித்தளம் ஒன்றில் வெளிவந்தது தொடர்பில் சபாவைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர். வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. விசாரணை அதிகாரியும், தனது விசாரணை அறிக்கையை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டார்.
எனினும் அந்த விசாரணை அறிக்கையை மேலும் சில ஆவணங்களுடன் முறைப்படுத்தும்படி தமது அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.