கெமாமான், ஜன.21-
திரெங்கானு மாநிலம், சுற்றுப்பயணிகளுக்குப் பாதுகாப்பற்றது என்று கூறப்படும் குற்றச்சாட்டை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹாலி இட்ரிஸ் மறுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கெமாமானில் ஓர் உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவரை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சுற்றுப்பயணிகளுக்கு திரெங்கானு பாதுகாப்பற்ற மாநிலமாகும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று அவர் விளக்கினார்.
இது போன்ற அவதூறான தகவல்கள், 2025 ஆம் ஆண்டில் திரெங்கானுக்கு வருகை புரியும் ஆண்டை பாதிக்கச் செய்து விடும் என்று தாம் அச்சம் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.