ஜோகூர்பாரு, ஜன.21-
கடந்த வாரம் ஜோகூர், பாசீர் கூடாங், Taman Scientex-ஸில் தனது பிள்ளை இறக்கும் அளவிற்கு அலட்சியமாக நடந்து கொண்டதாக கல்லூரி மாணவி ஒருவர் இன்று ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
19 வயது நூர் அதிரா ரம்லி என்ற அந்த மாணவி, நீதிபதி சித்தி நோராய்டா சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாணவி, ஒரு தாய் என்ற பொறுப்பிலிருந்து விலகி, தனது குழந்தையின் மரணத்தற்கு காரணமாக இருந்துள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.