கோலாலம்பூர், ஜன.21-
1எம்.டி.பி.யில் தனது நலன் சார்ந்த அம்சங்கள் எதுவும் இல்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்ட விசாரணையில் தாம் தலையிட்டதும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.
2016 ஆம் ஆண்டில் அன்றைய எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையர் டான் ஶ்ரீ சுல்கிப்ளி அமாட்டிற்கும் தமக்கும் நிகழ்ந்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல், 1எம்.டி.பி. சம்பந்தப்பட்டது அல்ல என்பதையும் நஜீப் நீதிமன்றத்தில் விளக்கினார்.