84 விழுக்காடு உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன

கோத்தாபாரு, ஜன.21-

சமூக வலைத்தளங்களில் கடந்த மூன்று வாரங்களில் 18,785 உள்ளடக்கங்களில் 84 விழுக்காட்டு உள்ளடக்கங்களை அகற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

சூதாட்டம் மற்றும் மோசடிகளைத் தாங்கிய உள்ளடக்கங்களாக அவை கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றை அகற்றும்படி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி.யை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது என்று ஃபாஹ்மி விளக்கினார்.

ஓன்லைன் மோசடிகளுக்கு சம்பந்தப்பட்ட பேர்வழிகள், சமூக ஊடகங்களை ஒரு தளமாகப் பயன்படுத்தி வருவதை ஒரு போதும் அனுமதிக்க இயலாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS