மஞ்சள் நிற காரின் வாகனமோட்டியை போலீஸ் தேடுகிறது

பத்து பஹாட், ஜன.21-

பத்து பஹாட் டோல் சாவடிக்கு அருகில் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய மஞ்சள் நிற காரின் வாகமோட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை சந்தேகத்திற்கு இடமாக நடந்துக்கொண்ட அந்த வாகனமோட்டியின் மஞ்சள் நிற காரை நிறுத்தும்படி போலீசார் பணித்தனர்.

காரை நிறுத்துவதைப் போல் நிறுத்திய பின்னர், காருக்குள் தனது அருகில் இருந்த ஒரு பெண்ணையும், ஒரு கைக்குழந்தையையும் போலீசாரிடம் அந்த ஆடவர் காட்டினார்.

அதன் பின்னர் அந்த ஆடவர், சற்றும் எதிர்பார்க்காத நிலையில் மின்னல் வேகத்தில் காரில் தப்பிச் சென்று விட்டதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருலானுவார் முஷாடாட் தெரிவித்தார்.

போலீசார் தன்னை பரிசோதனை செய்வதிலிருந்து தப்பிவிட்ட அந்த நபர் தற்போது முழு வீச்சில் தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS