சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே கைப்பேசி சோதனை

கோலாலம்பூர், ஜன.21-

தனிநபர்களின் கைப்பேசி சோதனை என்பது ஒரு வழக்கு விசாரணை தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபரிடம் மட்டுமே நடத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அனைவரிடமும் ஒட்டுமொத்தமாக கைப்பேசி சோதனை நடத்தப்படாது. போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும் நபர்களிடம் மட்டுமே கைப்பேசி சோதனை நடத்தப்படும் என்று ஐஜிபி தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில் பொது இடங்களில் பொது மக்களிடம் போலீசார் விருப்பம் போல் கைப்பேசியைச் சோதனையிட மாட்டார்கள் என்பதையும் ரஸாருடின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS