கிள்ளான், ஜன.21-
கிள்ளான், காப்பார் இண்டாவில் உள்ள தொழிற்பேட்டையில் ரசாயன மறுசுழற்சி தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி சம்பவத்தில் 32 பேர் காயமுற்றனர்.
நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய தொழிலாளர்கள் காயமுற்றதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
காயமுற்றவர்கள் அனைவரும் உள்ளூர் பிரஜைகள் ஆவார். அவர்கள் அனைவரும் தற்போது கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துமவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக விஜயராவ் குறிப்பிட்டார்.