நஜீப்பிற்கு தண்டனை குறைக்கப்பட்டதைத் தற்காத்தார் டத்தோ ஶ்ரீ அன்வார்

பெட்டாலிங் ஜெயா, ஜன.21-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு கால சிறைத் தண்டனை 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தற்காத்துப் பேசினார்.

42 மில்லியன் ண்ஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் குறைக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் தமக்கு நேர்ந்த கதியைப் போல் நஜீப் அவதியுறுவதை காண தாம் விரும்பவில்லை என்று லண்டனுக்கான அலுவல் பயணத்தின் போது டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் தாம் நரக வாழ்க்கையை கடந்து வந்ததையும் அன்வார் நினைவுக்கூர்ந்தார். தமக்கு சிறைச்சாலை உணவைத் தவிர வெளியிலிருந்து உணவு அனுமதிக்கப்படவில்லை என்பதையும் அன்வார் விளக்கினார்.

தமக்கு ஏற்பட்டதைப் போல நஜீப்பிற்கும் அவ்வாறு ஏற்பட வேண்டும் என்று தாம் விட்டு விட முடியுமா? நிச்சயம் முடியாது. நஜீப் ஒரு முன்னாள் பிரதமர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று Financial Times-க்கு அளித்த பேட்டியில் அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS