காஜாங், ஜன.22-
காஜாங்கில் ஒரு கட்டடத்தின் 12 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த ஆடவரின் காரில் ஒரு பையில் கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
நேற்று நண்பகல் 12.34 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 19 வயதுடைய அந்த ஆடவர் கடும் காயங்களுக்கு ஆளாகி, சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.
பகுதி நேரப் பணியாளரான அந்த ஆடவருக்கு சொந்தமான காரில் சோதனையிட்ட போது Semi Automatik ரக கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டு பிடிக்கப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Naazron Abdul Yusof தெரிவித்தார்.
துப்பாக்கி மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வரும் வேளையில் அந்த ஆடவரின் இறப்பை, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏசிபி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.