போர்ட்டிக்சன், ஜன.22-
பிறந்த குழந்தையைக் கத்தியால் குத்தி கொன்றது தொடர்பில் இளம் காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பத்திற்குத் தெரியாமல் குழந்தையைப் பிரசவித்த 18 வயது பெண், நேற்று காலை 11.15 மணியளவில் போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த போது, அந்தப் பெண்ணினால் குழந்தையைக் காட்ட இயலாததைத் தொடர்ந்து சந்தேகித்த மருத்துவர்கள், இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டைச் சோதனையிட்ட போது, ஒரு பைக்குள் கத்திக்குத்துக் காயத்துடன் பெண் குழந்தையின் உடல் சுற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் அந்தப் பெண்ணின் நெஞ்சுப்பகுதியிலும் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. புலன் விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்தப் பெண்ணும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் Maslan Udin தெரிவித்தார்.