இருவர் நீரில் மூழ்கி மரணம், மேலும் நால்வர் உயிர் தப்பினர்

கோத்தா திங்கி, ஜன.22-

ஜோகூர், கோத்தா திங்கி, Bayu Damai, Pantai Bayu Impian கடற்கரையில் ஒரு பெண்ணும், அவரின் உறவினர் ஒருவரும் நீரில் மூழ்கி மாண்டனர். மேலும் நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் 33 வயது சித்தி பாத்திமா என்ற மாதுவும் அவரின் 13 வயது Nur Arisya Hanan என்ற உறவுக்காரப் பிள்ளையும் கடற்கரையில் உல்லாசமாகக் குளித்துக்கொண்டு இருந்த போது, இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

பேரலையின் வேகத்தில் அறுவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட வேளையில் அந்த அறுவரையும், மீட்புப்பணியாளர்கள் உதவியுடன் பொது மக்கள் காப்பாற்றினார்.

இதில் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்தப் பெண்ணும், உறவுக்காரப்பிள்ளையும் உயிரிழந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

WATCH OUR LATEST NEWS