கோலாலம்பூர், ஜன.22-
வரும் ஜனவரி 29 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளை கிட்டத்தட்ட 26 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அறிவித்துள்ளது.
இந்த மொத்த எண்ணிக்கையில் 22 லட்சம் வாகனங்கள், PLUS எனப்படும் வடக்கு தெற்கு நெடுசாலையைப் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாகனங்கள் கிழக்குக்கரை நெடுஞ்சாலையான Lebuhraya Pantai Timur Fasa 1-யும், 82 ஆயிரம் வாகனங்கள் Lebuhraya Pantai Timur Fasa 2 ஐயும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள், பந்திங்கையும் தைப்பிங்கையும் இணைக்கும் WCE எனப்படும் மேற்கு கடலோர நெடுங்சாலையையும் பயன்படுத்தக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக LLM இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.