மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் சைஃப் அலி கான்

பிரபல பாலிவூட் நடிகர் சைஃப் அலி கான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருக்கிறார். கடந்த 6 நாட்களுக்கு முன் கத்திக்குத்துக்கு ஆளானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  
 
மருத்துவமனையில் இருந்து வெளியேறி அவர் தனது வீட்டிற்குள் நுழையும் முன் பத்திரிக்கையாளர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. 
 
54 வயதான சைஃப் அலிகான் இம்மாதம் 16 ஆம் தேதி, பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த தாக்குதலில் கத்திக் குத்துக் காயங்களுக்கு இலக்கானார். அவரைத் தாக்கிய நபர் பிடிபட்டுள்ளதாக மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது. 

WATCH OUR LATEST NEWS