பாங்காக்கில் காற்றுத் தூய்மைக்கேட்டால் 53 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன

பாங்காக், ஜன.22-

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 53 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அங்கு காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு சற்று மோசமான நிலையை எட்டியிருப்பதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பாதுகாப்பான அளவைத் தாண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சம்பந்தட்ட 53 பள்ளிகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. காற்றின் தரத்தைப் பொருத்து அவை நாளை அல்லது நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திறக்கப்படலாம். பாதிக்கப்பட்ட பள்ளிகள் மாற்று வகுப்புகள் அல்லது இணையம் வாயிலான கற்றல்-கற்பித்தலை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

சுவாசக் கவசம் அணியுமாறும், வெளிநடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும், முடிந்தால் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறும் பாங்காக்வாசிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இருமல், கண் எரிச்சல், சுவாசப் பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரைச் சென்று காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

WATCH OUR LATEST NEWS