கர்தல்கயா, ஜன.22-
துருக்கியின் வட பகுதியில் பிரபல பனிச்சறுக்கு மையமொன்றில் உள்ள தங்கும் விடுதியில் பரவிய தீயில் குறைந்தது 76 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமுற்றனர். தீயைத் தொடர்ந்து அவ்விடத்தில் சூழ்ந்த புகையால் குளிர்கால விடுமுறையைக் கழிக்க வந்த பல சுற்றுப் பயணிகள் பதற்றமடைந்தனர்.
பலியானவர்களில் இதுவரை 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் சிலரை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்தீச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அத்தங்கும் விடுதியின் உரிமையாளரும் அடங்குவார். தீக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.