நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், நடிகர் சிவராஜ் குமாருக்கு பதிலாக மற்றொரு பிரபலம் நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முன்கூட்டிய தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகம் உலக அளவில் சுமார் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தற்போது இந்த படத்தின் 2-ஆம் பாகம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவருக்கு மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்திருந்தார். மேலும் மோகன்லால், சிவ ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் போன்ற நடிகர்கள் கேமியோ ரோல்களில் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. ஆனால் கதைக்கு ஏற்ற போல் சில நடிகர்கள் மாற்றம் நடைபெறும் என தெரிகிறது. மோகன் லால் மற்றும் சிவ ராஜ்குமார் ரோலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகர் சிவராஜ் குமார் கடந்த 2 மாதங்களாக உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். எனவே ‘ஜெயிலர் 2’ படத்தில் அவருக்கு பதிலாக, பிரபல தெலுங்கு மாஸ் நடிகரான பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் திலீப் குமார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.