மான்செஸ்டர் சிட்டி கோல் மன்னன் எர்லிங் ஹாலண்ட் அவ்வணியுடன் 2034 வரையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன் மூலம் அவர் அக்கிளப்பில் மேலும் பத்தாண்டுகளுக்கு நீடிக்கிறார்.
அந்த நோர்வெய் ஆட்டக்காரரின் இதற்கு முந்தைய ஒப்பந்தம் 2027 வரை இருந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சிட்டியில் சேர்ந்ததிலிருந்து, அவர் 126 ஆட்டங்களில் 111 கோல்களைக் குவித்துள்ளார். நடப்பு ஒப்பந்தம் அவரது 34வது பிறந்தநாளில் காலாவதியாகிறது.
“மான்செஸ்டர் சிட்டி ஒரு சிறப்பு கிளப், அற்புதமான ஆதரவாளர்களைக் கொண்ட அற்புதமான மக்கள் நிறைந்தது. இது து ஒவ்வொருவரிடமிருந்தும் சிறந்ததைக் கொண்டு வர உதவும் சூழல்” என்று ஹாலண்ட் ஒரு கிளப் அறிக்கையில் கூறியுள்ளார். “நான் தொடர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறேன், தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். முன்னேறி மேலும் வெற்றியை அடைய முயற்சி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சி செய்கிறேன்.
புதிய ஒப்பந்தத்தின் சரியான விதிமுறைகள் வெளியிடப்படவில்லை, ஆனால் இது மிகவும் லாபகரமான விளையாட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹாலண்ட் 2022 இல் பொருசியா டார்ட்மண்டில் இருந்து சிட்டியில் சேர்ந்தார். ஏற்கனவே ஐரோப்பாவில் அதிக கோல் அடித்தவர்களில் ஒருவராக அவர் தம்மை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.