குழந்தை பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

கோத்தா திங்கி, ஜன.22-

கடந்த மாதம் தனது பராமரிப்பில் விடப்பட்டுள்ள ஒன்பது மாத கைக்குழந்தை மரணம் அடையும் அளவிற்கு அதனை சித்ரவதை செய்ததாக குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

61 வயது சியா முட் ஹூங் என்ற அந்த மூதாட்டி, நீதிபதி ஹாய்டா பாரிட்ஸால் அபு ஹசான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அந்த ஆண் குழந்தையின் தலையின் பின்புறம் ஏற்பட்ட காயத்திற்கும், அதனால் ஏற்பட்ட மரணத்திற்கும் அந்த மூதாட்டியே காரணம் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாது, கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி மெர்சிங், தாமான் இந்தான் ஜெயா 4ங்கில் வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS