மூவார், ஜன.22-
13 வயது உடல் ஊனமுற்றப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக 60 வயது ரொட்டிச் சானாய் வியாபாரி ஒருவருக்கு ஜோகூர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 15 ஆண்டு சிறை மற்றும் எட்டு பிரம்படித் தண்டனை விதிக்க தீர்ப்பளித்தது.
டின் சாலே என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபர், நீதிபதி சயானி நோர் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான இரண்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பிடிப்பட்ட தினத்திலிருந்து இத்தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 11 ஆம் தேதி குளுவாங்கில் உள்ள வாடகை வீட்டின் சமையல் அறையில் 13 வயதுடைய அந்த உடல் ஊனமுற்றப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.