நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம்

கோலாலம்பூர், ஜன.22-

மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள கேகே மார்ட் வர்த்தகத் தளத்தின் பிரதான கதவில் சிவப்பு சாயம் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சினமூட்டும் செயலில் ஈடுபட்டு, நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் அகோ டகாங் கேட்டுக்கொண்டார்.

கேகே மார்ட்டில் செல்லத்தக்க அல்லாத ஹலால் சான்றிதழைக்கொண்டு, சாண்ட்விச் ஹாம் & சீஸ் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைத் தொடர்பில் இவ்விவகாரத்தை போலீசாரும், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான ஜாக்கிமும் விசாரணை செய்து வரும் வேளையில் இப்படியொரு தாக்குதல் அந்த வர்த்தகத் தளத்தில் நடத்தப்பட்டது வருத்தத்தை அளிக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் அமைதியையும், பொது ஒழுங்கையும், உணர்ச்சிகரமான விவகாரங்களையும் காப்பதில் ஒவ்வொரு மலேசியரும் கடப்பாடு கொண்டுள்ளனர் என்பதை அமைச்சர் நினைவுறுத்தினார்.

நாட்டில் தொடர்ந்து அமைதியும் வளப்பமும் நிலவ எந்தவொரு தரப்பினரும் சட்டத்தை மீறிய செயலிலோ, சினமூட்டும் நடவடிக்கையிலோ ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் ஆரோன் அகோ டகாங் வலியுறுத்தினார்.

Simbah car merah premis KK Mart, menteri gesa jangan keruh keadaan, elak provokasi

WATCH OUR LATEST NEWS