பகுதி நேர வேலைக்கு ஆசிரியர்கள் அனுமதி பெற வேண்டும்

கோலநெருஸ், ஜன.22-

பகுதி நேர வேலையை செய்ய விரும்பும் ஆசிரியர்கள், அதற்கு முன்னதாக கல்வி அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்று அதன் அமைச்சர் பாட்லினா சிடேக் கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சு பிரத்தியேக வழிகாட்டலை கொண்டுள்ளது. அமைச்சின் அங்கீகாரமின்றி ஆசிரியர்கள் பகுதி நேர வேலையைச் செய்ய முடியாது என்று அந்த வழிகாட்டலில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் தொழிலில் தங்களை பிணைத்துக்கொண்டவர்கள், இதர தொழில்களில் பகுதி நேரமாக மேற்கொள்வது, அவர்களின் பிரதான பணியை பாதிக்கும். அந்த வகையில் தங்களின் முதன்மை பணி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவர்கள் , முதலில் கல்வி அமைச்சின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெறுவது அவசியமாகும் என்று பாட்லினா சீடெக் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS