மீன் லோரி கவிழ்ந்தது, மீன், இறால் நாலாபுறமும் சிதறின

கோத்தா திங்கி, ஜன.22-

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மீன் லோரி ஒன்று கவிந்ததில், அந்த லோரியில் ஏற்றப்பட்டிருந்த பல வகையான மீன்கள் மற்றும் இறால்கள் சாலையில் சிதறின.

இச்சம்பவம் இன்று காலை 9.20 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி – மெர்சிங் சாலையில் பெல்டா மாவாய் சாலை சந்திப்பில் நிகழ்ந்தது.

சாலையில் சிதறிய மீன்களையும், இறால்களையும் அள்ளிச் செல்வதற்கு பலர் தங்கள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு குழுமினர்.

இவ்விபத்து, நாசா ரக காரினால் ஏற்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் யூசோப் ஒஸ்மான் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS