குப்பாங், ஜன.22-
கெடா, குப்பாங்கில் சங்கிலித் தொடரைப் போன்று வீடுகளுக்கு தீயிட்டு, நாசவேலையில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிகப்படும் நபர் இறுதியில் பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் நிகழ்ந்த வந்த தீயிடப்பட்ட சம்பவங்களுக்கு காரணமான நபரை போலீஸ் தீவிரமாக தேடி வந்த நிலையில் கெடா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் அந்த நபரை வளைத்துப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மி மொக்தார் கருத்துரைக்க மறுத்து விட்டார். கெடா மாநில போலீஸ் தலைவர் பிசோல் சாலே, இது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியிலிருந்து தீயிடப்பட்ட 10 சம்பவங்களில் இந்நபர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதில் நான்கு வீடுகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.