ஜோகூர்பாரு, ஜன.22-
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதி ஜோகூர், ஸ்கூடாய், பத்து 8 ½ இல் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் முன்புறம் 31 வயது மாது ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் மூவர் ஜோகூர்பாருவில் இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
31 வயது சூ சியாவ் சூன், 48 வயது ஹெங் தங் ளை மற்றும் 45 வயது சுசிலா சின்னசாமி ஆகிய மூவர், 42 வயது தன் ஹவ் கீ என்ற மாதுவை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மூவரும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.