6 சுங்கத்துறை அதிகாரிகள் கைது

கோலாலம்பூர், ஜன.22-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கே.எல்.ஐ.ஏ சரக்கு மையத்தின் மின் சிகரெட்டுகளை கடத்தும் கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். முறியடித்துள்ளது.

ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மூலம் இந்த கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தகவல்கள் கூறுகின்றன.

கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்து, இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைப் போன சுங்கத்துறை அதிகாரிகளைக் கண்காணிப்பதற்கு கடந்த மாதம் ஓப் ஏர்வேய்ஸ் என்ற நடவடிக்கையை எஸ்.பி.ஆர்.எம். தொடங்கியது.

கே.எல்.ஐ.ஏ கார்கோ பிரிவிலிருந்து வெளியேறிய இரண்டு லோரிகளை எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் சோதனை செய்த போது, சுங்கத்துறையின் பரிசோதனையின்றி 19 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 32 ஆயிரம் மின் சிகரெட்டுகள் கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

பிடிபட்ட ஆறு சுங்கத்துறை அதிகாரிகளும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS