ரவூப், ஜன.22-
தெய்வீக வாழ்க்கைச் சங்கம் ரவூப் உபகிளை ஏற்பாட்டில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை பிற்கல் ஒரு மணி முதல், ரவூப் நகர தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.
பொங்கல் வைத்தல், சேலை அழகுராணிப் போட்டி, வேட்டி ராஜா, மாறுவேடம், உரி அடித்தல் என பல்வேறு கலை, கலாச்சார போட்டி நிகழ்வுகளுடன் நடைபெறும் இந்த பொங்கல் விழாவிற்கு மித்ரா பணிக்குழுத் தலைவர் P. பிரபாகரன்,கூட்டரசு பிரதேச அமைச்சின் முதன்மை சிறப்பு அதிகாரி திருமதி சிவமலர் கணபதி ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.
பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி விழா ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.