புத்ராஜெயா, ஜன.22-
பண்டிகை காலங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச டோல் கட்டண சலுகையை அரசாங்கம் இவ்வாண்டு முதல் நிறுத்தியிருப்பது, ஒரு தீர்க்கமாக முடிவு அல்ல என்று அரசாங்கப் பேச்சாளர் பாமி பாட்சீல் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்க்கமாக முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இலவச டோல் கட்டண சலுகையை அரசாங்கம் நிறுத்திவிட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்து இருப்பது, இதற்கு முன்பு கொள்கை அளவில் எடுக்கப்பட்ட முடிவை வழிகாட்டலாக கொண்டு, அவர் அறிவித்துள்ளார்.
எனினும் இவ்விவகாரத்தை மறு ஆய்வு செய்வதற்கு பலதரப்பட்ட தரப்பினரின் கருத்துகளை செவிமடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பாமி தெரிவித்தார்.