கோலாலம்பூர், ஜன.22-
மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவின் நாணயக் கொள்கைக் குழு, ஓ.பி.ஆர் வட்டி விகிதத்தை 3.0 விழுக்காடாக நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக பேங்க் நெகாரா விளக்கியுள்ளது.
இது முக்கிய பொருளாதாத்தின் சிறந்த உண்மையான அடைவு நிலை வளர்ச்சியையும், உலகளாவிய வலுவான வர்த்தகத்தையும் பிரதிபலிக்கிறது.
2025 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம், நேர்மறையான தொழிலாளர் சந்தை நிலைமை, மிதமான பணவீக்கம் மற்றும் குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட பணவியல் கொள்கையுடன் உறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.