பேரணி கூடுவதற்கு நில உரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்

புத்ராஜெயா, ஜன.22-

எந்தவொரு பேரணி நடத்துவதாக இருந்தாலும், அந்த பேரணி நடத்தப்படும் வளாகத்தின் உரிமையாளரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை சட்டம் வலியுறுத்துவதாக அரசாங்கப் பேச்சாளர் பாமி பாட்சீல் தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்பின்றி அனைத்து மலேசியர்களும் இந்த விதிமுறையை மதிக்கவும், பின்பற்றவும் வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சரான அவர் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் பாடாங் மெர்போக்கில் பேரணி கூட்டுகின்றவர்கள், அதன் வளாக உரிமையாளரிடம் அனுமதியை பெற்று, அத்தகைய பேரணியை நடத்தியுள்ளனர் என்பது தமக்கு இன்னமும் நினைவு இருப்பதாக பாமி பட்சீல் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியிருப்பதைப் போல இது போன்ற பேரணிக்கு அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து பல்வேறு விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS