கோலாலம்பூர், ஜன.22-
பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களை எழுப்பி, அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் முகமட் அக்மால் சாலேவுடன் மோதுவதற்கு தமக்கு ஆர்வமில்லை என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இன்று அறிவித்துள்ளார்.
அக்மாலுடன் மோதி, தனது மதிப்பையும், மரியாதையும் களங்கப்படுத்திக்கொள்ள தாம் விரும்பவில்லை என்று டிஏபி.யின் முன்னணித் தலைவரான ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
ஈயுடன் சண்டையிடுவதற்கு சிங்கம் ஆர்வம் காட்டாது. ஒரு சிங்கமாக தலைநிமிர்ந்து நிற்கவே தாம் விரும்புவதாக ங்கா கோர் மிங் சூளுரைத்துள்ளார்.
தம்மை சவாலுக்கு அழைத்து இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரின் செயல் குறித்து கருத்துரைக்கையில் ங்கா கோர் மிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.