டாவோஸ், ஜன.22-
மடானி அரசாங்கத்தின் தெளிவான பொருளாதார கொள்கைகள் மற்றும் அரசியல் நிலைத்தன்மை, மலேசியாவில் முதலீடு செய்வதற்கு மென்பொருள் நிறுவனங்கள் உட்பட AI செயற்கை நுண்ணறிவு தொழில்துறை பங்குதாரர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பெரியளவில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த முதன்மையான முதலீட்டாளர்களை கவர்வதற்கு அரசாங்கம் போதுமான ஊக்குவிப்புகளை வழங்கவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
AI செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்துடன் உறுதியான AI சட்டங்கள் மற்றும் தேசிய AI தரவுப்பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவிருக்கிறது.
மலேசியாவின் தேசிய கட்டமைப்புக்குள் AI முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து, அதனுடன் பயணிக்க அரசாங்கம் ஒரு விரிவான அணுகுமுறையை கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சுவிர்சலாந்து, டாவோஸ்சில் WEF அறக்கட்டளை வாரியத்தின் தலைவரும், தோற்றுநருமான பேராசிரியர் Klaus Schwab- தலைமையில் *அன்வாருடன் ஒரு கலந்துரையாடல் * எனும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.