லாஸ் ஏஞ்சல்சின் வடக்கே மேலும் ஒரு காட்டுத் தீ

காஸ்தாய்க், அக.23-

அமெரிக்கா, கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடக்கே நேற்று மற்றொரு காட்டுத் தீ ஏற்பட்டது. அக்காட்டுத் தீ 8,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் வேகமாகப் பரவியது. 
பலத்த காற்று மற்றும் புதர்ப்பகுதிகள் காய்ந்து இருந்ததால் தீ அதிவிரைவாகப் பரவியதாகக் கூறப்படுகிறது. 

19,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கட்டாய வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் வெளியேற்றப்பட்டனர்.மேலும் 16, 000 பேருக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஏரியில் இருந்து நீர் எடுக்கப்பட்டு பாய்ச்சப்படுகிறது. தீ மோசமாகப் பரவாமல் இருக்க, பிற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. புகை மண்டலம் காணப்படுவதால் போக்குவரத்து பாதுகாப்புக்காக சில முக்கியச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இம்மாதத் தொடக்கத்தில் இருந்து சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

WATCH OUR LATEST NEWS