ஜோகூர்பாரு, ஜன.23-
கட்டுமானம் நிறுவனம் ஒன்றுக்கு நெடுஞ்சாலை நிர்மாணிப்பத் திட்டத்தை பெற்றுக் கொடுப்பதற்கு கைமாறாக 50 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தை கையூட்டதாகப் பெற்றதாக நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் துணை நிறுவன நிர்வாகி ஒருவர் ஜோகூர்பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
47 வயது சைருல்நிஸாம் ரொஹானி என்ற அந்த நபர், நீதிபதி சித்தி நொராய்டா சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 7,12, 13 ஆகிய தேதிகளில் ஜோகூர்பாரு, தாமான் யூனிவெர்சிட்டியில் உள்ள உள்ளுர் வங்கியில் சைருல்நிஸாம் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனது மனைவியின் வங்கிக் கணக்கில் மூன்று கட்டங்களாக இந்த கையூட்டுத் தொகையை சைருல்நிஸாம் பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த நிர்வாகி மறுத்து விசாரணை கோரியுள்ளார்.