ஜோகூர்பாரு, ஜன.23-
கடந்த மாதம் ஜோகூர், பாசீர் கூடாங்கில் தொடக்கப்பள்ளி மாணவி ஒருவரை மானபங்கம் செய்ததாக பள்ளி ஆசிரியர் ஒருவர், ஜோகூர்பாரு செஷன்ஸ நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டார்.
36 வயது ஆரோன் வோங் செங் வென் என்ற அந்த ஆசிரியர் நீதிபதி சித்தி நொராய்டா சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த பத்து வயது மாணவியை கட்டியணைத்து, கன்னத்தல் இரு புறத்திலும் முத்தமிட்டதாக அந்த ஆசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் உபகரணங்களை பாதுகாக்கும் கிடங்கில் அந்த ஆசிரியர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.