கோலாலம்பூர், ஜன.23-
ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்ப்பதற்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் அரசு சாரா இயக்கங்களுக்கு ஒற்றுமைத்துறை அமைச்சு தொடர்ந்து மானியங்களை வழங்கி வரும் என்று அதன் அமைச்சர் ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.
அமைச்சிடமிருந்து மானியத்தை பெறுகின்ற அரசு சாரா இயக்கங்கள் மக்களிடையே ஒற்றுமையை விதைப்பதற்கான திட்டங்களை அமல்படுத்துவதிலும், அவை ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து தோள் கொடுத்து வர வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டில் நாடு தழுவிய நிலையில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 739 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 78 ஒருமைப்பாடுத் திட்டடங்கள், ஒற்றுமைத்துறை அமைச்சின் வாயிலாக அரசு சாரா இயக்கங்கள் அமல்படுத்தியிருப்பதையும் ஆரோன் அகோ டகாங் சுட்டிக்காட்டினார்.