மலாக்கா, ஜன.23-
தனது சேவையைப் பெற வந்த பகுதி நேர நடிகர் ஒருவரை மானபங்கம் செய்ததாக முக ஒப்பனையாளரும், சிகை அலங்கரிப்பாளருமான ஆடவர் ஒருவர் மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
42 வயது சாரில் சாரிப் என்ற அந்த முக ஒப்பனையாளர், நீதிபதி ஹெடெரியா சிரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
18 வயதுடைய அந்த பகுதி நேர நடிகருக்கு இலவசமாக சிகை அலங்கரிப்பு மற்றும் முகஒப்பனை செய்வதாக வழங்கிய அழைப்பை ஏற்று ஒப்பனையாளரின் சிகை அலங்கரிப்பு மையத்திற்கு சென்ற போது, அவர் இந்த ஆபாச சேட்டையைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 17 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் மலாக்கா, தாமான் தாசிக் உத்தாமாவில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.