பிச்சைக்காரர்கள் நிரம்பும் தளமாக மலேசியா அனுமதிக்கப்படாது

கோலாலம்பூர், ஜன.23-

சிறார்களை பிச்சை எடுக்க வைத்து, சுரண்டி வரும் கும்பல்களின் தளமாக மலேசியா உருவாகுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நன்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இத்தகைய மோசடிக்கும்பல்களின் செயல்கள் மலேசியாவின் தோற்றத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக அறியா பருவத்தில் உள்ள சிறார்களைப் பயன்படுத்தி, அவர்களை பிச்சை எடுக்க வைக்கும் செயல், ஒரு குற்றச்செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நன்சி சுக்ரி தெரிவித்தார்.

பிச்சைக்காரர்களை துடைத்தொழிக்கும் நடவடிக்கையை தமது அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS