பண்டிகைக் கால டோல் கட்டண இலவசச் சலுகை: இலக்குக்கு உரிய மக்களுக்கு வழங்கப்படலாம்

டாவோஸ், ஜன.23-

பண்டிகை காலங்களில் இரண்டு தினங்களுக்கு வழங்கப்பட்டு வந்த டோல் கட்டண இலவச சலுகை, இலக்குக்கு உரிய மக்களுக்கு வழங்கப்படுவது தொடர்பில் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அனைத்து தரப்பைச் சேர்ந்த மக்களுக்கும் வழங்கப்படாமல், B40 மற்றும் M40 மக்களுக்கு எவ்வாறு அரசாங்கத்தின் உதவிகள் சென்றடைவதற்கு கவனம் செலுத்தப்படுகிறதோ? அதேபோல் இலக்குக்கு உரிய மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பண்டிகை கால இலவச டோல் கட்டண சலுகையை ரோல்ஸ் ரோய்ஸ், மெர்சடிஸ் மற்றும் மசெராடி போன்ற ஆடம்பர கார்களை கொண்டுள்ள வசதிப்படைத்த மக்களுக்கும் வழங்கப்படுவது நியாயம்தானா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்று சுவிசர்லாந்து, டாவோசில் மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

இவ்விவகாரம் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சண்டர் நந்தா லிங்கியுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS