சென்னை, ஜன, 23-
நடிகர் மணிகண்டன் விஜய் சேதுபதியை வைத்து திரைப்படமொன்றை இயக்கவிருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மணிகண்டன் விஜய் சேதுபதியிடம் கதையொன்றைக் கூறியிருப்பதாகவும் அது அவருக்குப் பிடித்துப் போய் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இருவரும் இணைந்து பணியாற்றக்கூடும்.
நடிகர் மணிகண்டன், நடிகராக உருவெடுப்பதற்கு முன், உதவி இயக்குநராகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார். இது இல்லாமல், பல படங்களில் கதை ஆசிரியராகவும் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். விஜய் சேதுபதி, நடித்த விக்ரம் வேதா படத்தின் முழு வசனமும் மணிகண்டன் தான் எழுதினார். இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தவர், விஜய் சேதுபதிதான். இது தொடர்பாக மணிகண்டனே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
மணிகண்டன் ஏற்கனவே மறைந்த நடிகர் டெல்லி கணேஷை வைத்து நரை எழுதும் சுயசரிதம் எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். அது விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
